புது அரசு

1 . கூட்டுத்துவ வழிகளை நடைமுறை படுத்தவும், அக்கறை யற்றவர்களை வற்புறுத்தவும், ஒரு நீடித்த உலகை படைக்கவும் நமக்கு ஒரு கூட்டுத்துவ அரசாங்கம் வேண்டும் 2 . இதற்காக, நமக்கு ஒரு கூட்டமைப்பு அதாவது ஒரு கட்சி அல்லது கூட்டணி வேண்டும்.

புது வாழ்க்கை

1 . எளிமையான உணவு, உடை, வீடு என்பது வளமான வாழ்க்கை, வறுமை அல்ல. 2 . நம் தற்போதைய வாழ்முறை நிலைக்கக் கூடியதல்ல. உணவு, உடை, வீடு முதலியவற்றில் மேலும் மேலும் கூடுதலான ஆடம்பரத்திற்காக மக்கள் போட்டி போடுகின்றனர்.

புரட்சி யாருக்கு வேண்டும்?

உற்பத்தி முறை லெனின் மற்றும் மாவோவின் காலத்தில் இருந்ததை போல் இப்போது இல்லை. உற்பத்தி இப்போது உலகமயம், அவுட்சோர்ஸ்மயம், ஒப்பந்தமயம் மற்றும் துணை ஒப்பந்தமயம் செய்யப்பட்டுள்ளது. துணை ஒப்பந்தத்தின் நிலைகளுக்கு வரம்பு இல்லை. பொருகள்களின் பகுதிகள் உலக அளவில் வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. நுகர்வு உலகமயமாக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் இடையூறு மற்ற எல்லா இடங்களையும் பாதிக்கிறது.